ம்ம தமிழ்நாட்ல இருக்கும் பல்கலைக் கழகங்களில் நடக்கும் சர்ச்சைகளும் சலசலப்புகளும் இந்திய புகழ் பெற்றவை. அதேபோல் சில பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனங்கள் ஆர்.எஸ்.எஸ்.புகழ் பெற்றவை. அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக, கர்நாடகாவிலிருந்து ஆர்.எஸ்.எஸ். பார்ட்டியான சூரப்பாவை இம்போர்ட் பண்ணியது பா.ஜ.க. மேலிடம். இப்போது பா.ஜ.க.வின் அடுத்த குறி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம்.

Advertisment

anamaliuniversity

செட்டிநாட்டு வேந்தர் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியாரால் 1929-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது அண்ணாமலை பல்கலைக் கழகம். காலப்போக்கில் ஆலமரமாக வேர்விட்டு உலகப் புகழ் பெற்றது. ஆனால் இப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக எம்.ஏ.எம்.இராமசாமி இருந்த காலகட்டத்தில் முறைகேடுகளின் முதலிடமாக மாறியது. இதனால் 2013-ஆம் ஆண்டு பல்கலை நிர்வாகம் மொத்தத்தையும் தன் வசப்படுத்தியது தமிழக அரசு.

அரசு கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின் முதல் துணைவேந்தராக பொறுப்பேற்றார் மணியன். இவரின் பதவிக்காலம் மே.27-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. உடனே புதிய துணைவேந்தரை நியமிக்க தேடுதல் குழுவை நியமித்தார் பல்கலையின் வேந்தரான கவர்னர் பன்வாரிலால். தேடுதல் குழுவின் தேடலில் ஆந்திரா, தெலங்கானா, மும்பை, டெல்லி, உத்தரகாண்ட், ஜார்கண்ட் போன்ற அயல் மாநிலங்களில் இருந்து தான் முக்கால்வாசி விண்ணப்பதாரர்கள் சிக்கியிருக்கிறார்கள். போனா போகுதுன்னு தமிழகத்திலிருந்து போன ஒருசில விண்ணப்பங்களில் பஞ்ச் போட்டு ஃபைலில் கட்டி வைத்திருக்கிறாராம் பன்வாரி. அந்த ஒருசில விண்ணப்பதாரர்களில் இப்போதையை துணைவேந்தர் மணியன், தொலைதூரக் கல்வி இயக்குநர் நாகேஷ்வரராவ், முன்னாள் வேளாண்துறைத் தலைவர் கதிரேசன் ஆகியோரும் உள்ளனர்.

Advertisment

மேற்படி அயல் மாநிலங்களில் இருந்து விண்ணப்பித்தவர்களில் சங்பரிவார மைண்ட் செட் உள்ளவர்களை லென்ஸ் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறதாம் தேடுதல் குழு. மணியனை மீண்டும் நியமித்தால் நன்றாக இருக்கும் எனச் சொல்லும் பல்கலைக்கழக ஊழியர்கள் சங்க கூட்டமைப்பினர், அதற்கான காரணத்தையும் விளக்கினார்கள்.

பேராசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் சம்பளம் போடவே முடியாத அளவுக்கு நிதிச்சிக்கலில் இருந்த போது, அரசுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்ததோடு, ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி, அனைத்து ஊழியர்களுக்கும் கடந்த வாரம் சம்பளம் கிடைக்கச் செய்தார் மணியன். உயர்கல்வி அமைச்சர் அன்பழகனிடமும் மணியனை நியமிக்கும்படி வலியுறுத்தியிருக்கிறோம். இந்த நிலைமையில் புதியவர் வந்தால், பல்கலைக் கழகத்தைப் பற்றி புரிய வைப்பதே பெரும்பாடாக இருக்கும்’’ என்ற நிலவரத்தைச் சொன்னார்கள்.

துணைவேந்தர் மணியனும் தனது வழியில் முயற்சித்துக் கொண்டிருக்கிறார். கோடிகளில் பேரமும் ஆரம்பமாகிவிட்டது.

-அ.காளிதாஸ்